ஐபிஎல் 2027 தொடருக்காக மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் பயிற்றுவிப்புக் குழுவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பேட்டிங் பயிற்சியாளராக ராபின் உத்தப்பாவும், fielding பயிற்சியாளராக டி திலீப்பும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் கீரோன் பொல்லார்ட் தலைமையின் கீழ், முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா பேட்டிங் பயிற்சியாளராகவும், இந்திய அணியின் முன்னாள் fielding பயிற்சியாளர் டி திலீப் fielding பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முன்னாள் வீரர்களான மிட்செல் மெக்லெனகன் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், தவால் குல்கர்னி வளர்ச்சிப் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாற்றங்களைத் தொடர்ந்து, அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகச் செயற்பட்ட லசித் மலிங்க , கார்ல் ஹோப்கின்சன் ஆகியோர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உத்தப்பா ஐபிஎல் அணி ஒன்றில் பயிற்சியாளராகப் பொறுப்பேற்பது இதுவே முதன்முறையாகும்.
அதேவேளை, மெக்லெனகன் இதற்கு முன்பு ஐஎல்டி20 (ILT20 2024) தொடரில் எம்ஐ எமிரேட்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகச் செயற்பட்டு அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
