பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாடகை வீடு ஒன்றிலிருந்து சட்டப் பட்டப்படிப்பு மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் தனியார் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வந்த 26 வயதுடைய மான்னமரக்கலகே நதுனி சஹஸ்ரீ குரே என அடையாளம் காணப்பட்டுள்ளார். மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பாணந்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
