இலங்கையில் இன்று (நவம்பர் 1) முதல் எட்டு வகையான நிதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, வங்கிக் கணக்குகளைத் திறத்தல், கடன் அட்டைகளைப் பெறுதல், கட்டடத் திட்டங்களுக்கு அனுமதி பெறுதல், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்தல் மற்றும் வாகன அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கு TIN சான்றிதழ் அவசியமாகும்.
மேலும், காணி அல்லது காணி உரிமையைப் பதிவு செய்தல், வணிக நிறுவனங்களைப் பதிவு செய்தல் மற்றும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகளுக்கும் இந்தச் சான்றிதழ் தேவைப்படும்.
குறித்த நடைமுறை 2026ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரிச் சட்டத் திருத்தத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ளது. தேவையானவர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையவழிச் சேவையின் ஊடாக TIN எண்ணைப் பெற்றுக்கொள்ளவும் சரிபார்க்கவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
