இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) நடைமுறையில் சில மாற்றங்கள் இன்று (நவம்பர் 1) முதல் அமுலுக்கு வந்துள்ளன.
அரசாங்க அறிவிப்பின்படி, விற்பனைக்குப் பின்னர் வழங்கப்படும் தள்ளுபடிகள் தொடர்பான விதிகள் எளிமைப்படுத்தப்படுவதுடன், உள்ளீட்டு வரி அதிகமாகச் செலுத்திய நிறுவனங்களுக்கு வழங்கப்படும் தற்காலிக வரித் திருப்பிச் செலுத்தும் நடைமுறையும் விரைவுபடுத்தப்படவுள்ளது.
இந்த மாற்றங்கள் வர்த்தக நிறுவனங்களின் வரி இணக்கச் செயற்பாடுகளை எளிதாக்குவதுடன், பணப்புழக்கச் சிக்கல்களைக் குறைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026–2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட மாற்றங்களின் ஒரு பகுதியாக இந்த நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
