Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

புளோரிடா விமான விபத்தில் 20 வயது பெண் துணை விமானி பலி!

நவம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) இடம்பெற்ற பயங்கர விமான விபத்தில் உயிரிழந்த ஒன்பது பேரில் ஒருவரான 20 வயது பெண் துணை விமானியின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நதாலியா கேடெல்ஹா ஃபில்குவேரஸ் (Nathalia Gadelha Filgueiras) என்ற இளம் விமானியே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் தனது 17 வயதிலேயே, உயர்நிலைப் பாடசாலையில் கல்வி பயின்றுகொண்டிருந்தபோது தனியார் விமானி உரிமத்தைப் பெற்றிருந்தார்.

சிறுவயதிலிருந்தே விமானப் பயணத்தில் ஆர்வம் கொண்டிருந்த அவர், எதிர்காலத்தில் விமான நிறுவனமொன்றில் விமானியாகப் பணியாற்ற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெறுவதற்கு முன்னர் சுமார் ஒன்பது மாதங்களாக வர்த்தக விமானியாகப் பணியாற்றி வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெக்சாஸ் மாநிலத்தின் ஆஸ்டின் நகரிலிருந்து பஹாமாஸ் நோக்கிப் பயணித்த Learjet 60 ரக தனியார் விமானம், புளோரிடாவின் பாம் பீச் கவுண்டி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சுமார் 12.50 மணியளவில் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் விழுந்து தீப்பிடித்தது. விமானத்தில் இருந்த ஒன்பது பேரும் உயிரிழந்தனர்.

விபத்துக்கு முன்னர் விமானக் குழுவினர் பனிப்படலம் மற்றும் மிதமான கொந்தளிப்பு நிலை தொடர்பில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துக்கு அறிவித்திருந்தனர். பின்னர் விமானம் திடீரென உயரத்தை இழந்து அவசரநிலையை அறிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானத்தின் வீழ்ச்சிக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை (NTSB) விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

ட்ரம்பின் மகள் கணவரோடு இந்தியாவுக்கு விஜயம் !

மே 30, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை

ஜூலை 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விலங்கு தீவன உற்பத்தி மீதான தடை நீக்கம்!

ஜூலை 6, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

கரூர் சம்பம் தொடர்பில் தாக்கல் செய்த மனுவை திரும்பப்பெற்றது திமுக

ஜூலை 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube