Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வருக்கு எதிரான வழக்கு நவம்பர் 7ஆம் திகதி விசாரணை!

நவம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு வழக்கை எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று (2) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரசந்த கொடவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அடுத்த விசாரணைத் திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு 5, 7 மற்றும் 23ஆம் இலக்க சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

2021 முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஊடகம், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகப் பதவி வகித்தபோது, தனது தனிப்பட்ட பணிக்குழுவில் நெருங்கியவர்களுக்கு நியமனங்களை வழங்கியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவர்களுக்கு அமைச்சின் ஊடாக வழங்கப்பட்ட சம்பளம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகளைத் தனது தனிப்பட்ட செலவுகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்துக்கு 80 இலட்சம் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, அமாலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் நிபுணி கிருஷ்ணிகா ஆகிய நால்வருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

இன்றைய விசாரணையின்போது கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பிரதிவாதிகள் திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வாகன இறக்குமதி வரி மீதான 50% மிகைக் கட்டணம் டிசம்பர் வரை நீடிப்பு

ஆகஸ்ட் 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலையில் விசாரணைகளுக்கு மறுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி

ஜூலை 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிரிழந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

ஜூலை 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

ஜூலை 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube