இலங்கையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் “முழு நாடுமே ஒன்றாக ” (Ratama Ekata) போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதற்குள், சுமார் 22,000 கிலோகிராம் பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 3 இலட்சத்து 10 ஆயிரத்திற்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் பாவனையாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் அச்சுறுத்தலற்ற இலங்கையை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
