இலங்கையின் மிக வயதான உயிருடன் வாழும் ஆண் எனக் கருதப்படும் பி.எச். மெனியல் தனது 111ஆவது வயதை எட்டியுள்ளதாக முதியோர் உரிமைகள் தொடர்பான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.
கரந்தெனிய, அங்குலுகல்ல பகுதியைச் சேர்ந்த இவர் 1915ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் திகதி பிறந்துள்ளார்.
111 வயதை எட்டியுள்ள போதிலும், அவர் சிறந்த மனநலத்துடனும் தெளிவான நினைவாற்றலுடனும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது பிள்ளைகளின் தந்தையான இவருக்கு ஐந்து மகன்களும் நான்கு மகள்களும் உள்ளனர். இவர்களில் மூத்த பிள்ளை உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய எட்டுப் பிள்ளைகளும் உயிருடன் உள்ளனர்.
மேலும், இவருக்கு 92 பேரப்பிள்ளைகளும் 12 பூட்டப்பிள்ளைகளும் உள்ளனர்.
குடும்பத்தினரின் அன்பான பராமரிப்பில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் மெனியலை கௌரவிக்கும் வகையில், முதியோர் உரிமைகள் தொடர்பான தேசிய செயலகம் மற்றும் கரந்தெனிய பிரதேச செயலக அதிகாரிகள் நேற்று முன்தினம் (03) அவரது இல்லத்துக்குச் சென்று பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
