வவுனியா – பூவரசன்குளம் பகுதியில் இருந்து பாடசாலைப் பையினுள் மறைத்து எடுத்துவரப்பட்ட 1,500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் 30 வயதுடைய நபர் ஒருவர் யாழ்ப்பாணம், அனலைதீவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவிலிருந்து பயணிகள் படகு மூலம் அனலைதீவுக்கு மதுபானத்தைக் கடத்த முற்பட்டபோது, பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர் அனலைதீவு ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர் எனவும், பூவரசன்குளம் பகுதியில் தங்கியிருந்து தொழில் புரிந்து வருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மதுபானத்துடன் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனலைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
