கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான பட்டுவத்தே சாமர எனப்படும் மனோஜ் சுரங்க லியனகேவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் அசர்பைஜானில் வைத்துக் கைது செய்யப்பட்டு, கடந்த மே மாதம் 10ஆம் திகதி இரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
இதனையடுத்து, அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (04) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
