Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேராதனை ரயில்பாதை பணிகள் மிக விரைவில் நிறைவடையும் – பிரியந்த தீகல!

வைகாசி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் ரயில்வே உட்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுக்கும் பணிகள் அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே திணைக்களத்தின் தலைமைப் பொறியியலாளர் பிரியந்த தீகல விடுத்துள்ள அறிவிப்பின்படி,

பேராதனை ரயில்வே பாலத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் 4 முதல் 5 மாதங்களுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருடத்தின் இறுதிக்குள் பாலத்தின் அனைத்துப் பணிகளும் முழுமையாக நிறைவு செய்யப்படும்.

இதன் மூலம் மலையக ரயில் பாதையில் கண்டி வரையிலான ரயில் சேவைகள் மிக விரைவில் நிச்சயமாக மீண்டும் ஆரம்பிக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

மேலும் மாத்தளைக்கான ரயில் பாதை மற்றும் கம்பளையிலிருந்து நாவலப்பிட்டி வரையான ரயில் பாதைப் பகுதிகள் மிகவும் சவாலானவையாகக் காணப்படுகின்றன.

இப்பகுதிகளுக்குச் செல்வதற்கான பிரதான வீதி இணைப்புகள் இல்லாததால், பணிகளைத் தரைவழியாகக் கொண்டு செல்வது கடினமாக உள்ளது. இதன் காரணமாக, ஒவ்வொரு பகுதியாக மெதுவாகப் பணிகளை முன்னெடுக்கவேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு பதுளை வரையான முழுமையான ரயில் பாதைகளையும் 2027ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் முழுமையாக மீட்டெடுக்க உத்தேசித்துள்ளோம். புதிதாக ஒரு ரயில் பாதையை அமைப்பது எளிதானது. ஆனால் பழைய பாதையை மீண்டும் புனரமைப்பது மிகவும் கடினமான காரியம். அதற்கான பணிகளில் நாம் ஈடுபட்டுள்ளோம்” என தலைமைப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வத்தேகமவிலிருந்து உக்குவலை வரையான 3 முதல் 4 கிலோமீட்டர் வரை கரடுமுரடான நிலப்பகுதி காணப்படுவதோடு கடந்த காலத்தில் இப்பகுதிகள் முறையான மண் பாதுகாப்பு கட்டமைப்புகள் இன்றி அமைக்கப்பட்டிருந்ததால், தற்போது நவீன பொறியியல் முறைகளைப் பயன்படுத்தி இப்பாதைகள் மறுவடிவமைப்பு செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல கொடியேற்றம்!

ஆனி 3, 2026
இலங்கை

சுரேஷ் சலே நடத்தப்பட்ட விதம் அரசியலமைப்புக்கு முரணானது: ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்!

ஆனி 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 5 பேர் பலி!

ஆனி 8, 2026
முக்கியச் செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இலக்கம் மோசடி இலக்கங்களின் பட்டியலில் இணைப்பு!

வைகாசி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube