சீனாவின் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயில் அமைந்துள்ள ஷிங்ஹாய் மாவட்டத்தில் இன்று இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை 18 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
முதல் நிலநடுக்கம் இன்று காலை 11:16 மணியளவில் 5.7 மெக்னிடியூட் ஆகப் பதிவாகியுள்ளது.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்டுச் சரியாக 18 நிமிடங்களுக்குப் பின்னர், அதே பகுதியில் மெக்னிடியூட் அளவில் 5.8 என்ற வலுவான இரண்டாவது நிலா அதிர்வு பதிவாகியுள்ளது.
இந்த இரண்டு நிலநடுக்கங்களும் பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளன. இவை கிங்ஹாய் மாகாணத்தின் தலைநகரான சினின்கிலிருந்து சுமார் 244 கி.மீ தொலைவில் மையங்கொண்டிருந்தன.
நில அதிர்வினால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
