Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுதினம் இப்போது திருவிழாக்களாக மாற்றப்பட்டுள்ளது – அருட்தந்தை மா.சத்திவேல்!

வைகாசி 17, 2026
படிக்க 3 நிமிடங்கள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கே மக்கள் வாக்களித்து பதவியிலும் அமர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என, சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கான இறுதி ஆயத்தங்கள் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பல்வேறு இடங்களில் முள்ளிவாய்கால் கஞ்சியும் வழங்கப்படுவதை நாம் அறிவோம். இது வெறும் நிகழ்வு அல்ல என்பதும் எமக்கு தெரியும். இது எமது வலிகளுக்கான அரசியல் திசை காட்டி. மக்களின் அரசியல் வலிமையையும் அதற்கான மக்கள் திரட்சியையும் உலகிற்கு காட்டி நிற்கும் மக்கள் தளம்.

ஆனால் அரசியல் வலி சுமந்து 17வது ஆண்டினை தொட்டு நிற்கின்ற வேளையில் நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன? எந்த அரசியல் திசையை நோக்கி பயணிக்கின்றோம்? அரசியல் வலி சுமக்கும் ஓர் இனமாக மக்கள் அரசியலை பலமடைய செய்வதற்கும், எம் அரசியல் எதிரிகளுக்கு எதிராக எம் மக்கள் பலத்தை எந்த அளவிற்கு காட்டி உள்ளோம்? என்பதற்கான விடை தேடுகின்ற போதுதான் இவ்வருடத்தில் நாம் ஏற்றுகின்ற சுடர் உயிர் தியாகிகளுக்கு கௌரமாகவும், எம் அரசியல் எதிரிகளுக்கு அரசியல் விழிப்பையும் ஏற்படுத்தும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை எமது விடயத்திலும் தோல்வி கண்ட அமைப்பாகவே தெரிந்த போதிலும் எம்மவர்கள் அங்கு செல்வதை புனித யாத்திரையாக்கி ஒவ்வொரு வருடமும் பயணிக்கின்றனர். அதிலும் கூட்டு தன்மை கிடையாது. தனித்தனியாக சொர்க்கம் போக நினைப்தாகவே தெரிகிறது .ஐ.நா மனித உரிமை பேரவைக்கு கடிதம் எழுதுவதிலும் இதே நிலையே தொடர்கின்றது.

கடந்த 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதில் தொடங்கி அண்மையில் வடக்கு கிழக்கு ஆயர்களின் முயற்சி , தமிழ் சட்டத்தரணிகளின் முயற்சி என எல்லாமே தோல்வியாகவே நாம் காண்கின்றோம்.

எமது அரசியல் விடயத்திலும் சர்வேச ராஜதந்திரிகளை கையாள்வதிலும் நாம் இருளில் நடப்பதாகவே தெரிகிறது. அவர்கள் எமக்கு பாடம் சொல்லும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள், மாவீரர் தின நிகழ்வுகள் எல்லாம் கோயில் திருவிழாக்களாகியுள்ளதாகவே பலர் கருதுகின்றனர். திருவிழாக்கள் உபயக்காரர்களைப் போல ஒழுங்கமைப்பாளர்கள் அவற்றை தத்தமது அடையாளத்திற்கான காட்சிகளாக்கி மக்களின் உணர்வுகளை தூண்டி அவர்களை போதை நிலைக்கு தள்ளுவதை என்னவென்று கூறுவது?

கடந்த 17 ஆண்டுகளாக தமிழர் தாயக அரசியலை மக்கள் மையப்படுத்தி பலமடையச் செய்வதில் பெரும்பாலான அரசியல் தலைமைகள் அரசியல் தடம் புரண்டு, அரசியல் அறம் விலகி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு யார் காரணமாக இருந்தார்களோ அவர்களுக்கே வாக்களித்து பதவியிலும் அமர்த்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களை தமிழர்களின் குருதி தோய்ந்த நிலத்திற்கு அழைத்து வந்து செங்கம்பலம் விரித்து மேளதாளத்தோடு மேடைக்கு அழைத்துச் செல்வதோடு நின்றுவிடாது செல்ஃபி எடுத்து மகிழும் தலைமுறையினரும் உருவாகியுள்ளமைக்கு நாமே காரணம். இதுவே எமது அரசியல் அவலம்.

இது இவ்வாறிருக்க முள்வாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் பகிரப்படும் கஞ்சியில் சுவை தேடும் கூட்டமும் உருவாகியுள்ளதோடு, சுவையூட்டுவோரும் உள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் தின நிகழ்வுகள், தியாகிகள் தினம் தொடர்பில் வடக்கு கிழக்கு தழுவிய பொது கட்டமைப்பு உருவாக்கப்படுதலும் அதன் அரசியல் வழிதடமும் வரையப்பட வேண்டும்.

அத்தோடு மேற்கூறிய நிகழ்வுகளுக்கான பொது விதிகளும் மக்கள் மயப்படுத்தலும் வேண்டும். அதுவே எம் அரசியலை சரியான திசையில் பயணிக்க வழி சமைப்பதோடு மக்களை திரட்சி கொள்ளவும் செய்யும்.

எமது அரசியல் பயணம் உயிர் தியாகத்தால் கட்டி எழுப்பப்பட்டது. அது தொடர்பான ஆழமான அரசியல் சிந்தனை மூலம் மக்களை பலப்படுத்துவதன் மூலமே எமது அரசியல் இலக்கை நோக்கி பயணிக்க முடியும். அதற்காக இவ் வருடம் தியாக சுடர் ஏற்றுவோம். ஒற்றுமையான மக்களாக ஒன்றிணைவோம் என இந்த ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அமெரிக்க FBI-யின் விசேட “குழு” இலங்கைக்கு வரவில்லை!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலே விவகாரம்: ஐ.தே.க. அறிக்கை!

ஆனி 9, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகள் சந்திப்பு – 7 உடன்படிக்கைகள் கைச்சாத்து!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு திராய்மடுவில் வீடொன்றில் தீ பரவல்!

ஆனி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube