Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு!

வைகாசி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (22) இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குளியாப்பிட்டிய – நாரம்மல வீதியின் போஹிங்கமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டிய நோக்கி பயணித்த கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த காரின் சாரதி, அதில் பயணித்த பெண் ஒருவர் மற்றும் இரு பிள்ளைகள் குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், காரின் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பானகமுவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் என தெரியந்துள்ளது.

இதேவேளை, கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹியங்கனை – தெஹியத்தக்கண்டிய வீதியின் 12ஆம் மைல்கல் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெஹியத்தக்கண்டிய நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பஸ் உடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ரூபாயின் விலை வீழ்ச்சி

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருமுறிகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் – ப.சத்தியலிங்கம்!

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தவறுதலாகக் கைமாறிய தொகையில், 51 மில்லியன் ரூபா தொடர்பில் நாமல் கடும் விமர்சனம்!

சித்திரை 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுளம்பு குடமிகளுடன் சூழலைப் பேணிய 19 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube