Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

2 கிலோ தங்கத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலீஸ் உத்தியோகஸ்தர் கைது !

வைகாசி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பில் ஆள் ஒருவரை கடத்தி 2 கிலோ தங்கத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ள உப பொலிஸ் பரிசோதகர் (சப்இன்ஸ்பெக்டர்) களனியில் பொலிஸ் பயிற்சி பாடநெறியில் கற்று வந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் 21ம் திகதி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 2023ம் மாச் 18ம் திகதி கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றும் போது ஒருவரை கடத்தி 2 கிலோ தங்கம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்துள்ள நிலையில் அவரை மட்டு வெல்லாவெளி பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து அங்கு கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் குற்றம் தொடர்பான களணியில் உள்ள பொலிஸ் பயிற்சி நெறிக்கு கற்பதற்காக சென்றுள்ள நிலையில் இந்த ஆள் கடத்தல் கொள்ளை தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வந்த சிஜடி யினர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பயிற்சியில் இருக்கும் போது புதன்கிழமை (20) கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை 21ம் திகதி கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவானிலை

பெரும்பாலான பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு!

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலன்னறுவையில் தனியார் பஸ் விபத்து – 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி

புரட்டாதி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை ஏற்றுமதி வருமானம் 4 மாதங்களில் 5.7 பில்லியன் டொலர்களாக உயர்வு!

வைகாசி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீன்பிடிப் படகு பறிமுதல்; 9 மீனவர்கள் கைது

ஆவணி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube