Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி – தங்கெதர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

வைகாசி 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்

காலி – தங்கெதர பகுதியில் கடந்த 12ஆம் திகதி நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளைத் தொடர்ந்து, குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்த மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட விசாரணைகளின் போது, நேற்று வெள்ளிக்கிழமை (29) பகல் பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மில்லகஹ சந்தியில் வைத்து இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும்போது அவரிடமிருந்து 03 கிராம் 810 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இக்கொலைச் சம்பவத்திற்கு ஆதாரமாகவும் உடந்தையாகவும் செயற்பட்ட குற்றச்சாட்டில் 23 ஆம் திகதி வலான ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 12 ஆம் திகதி காலை 7:30 மணியளவில் கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரியொருவர், தங்கேதர பகுதியில் வைத்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

மேலும், இக்கொலைச் சம்பவம் தொடர்பில் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

எரிபொருள் விலைகளில் திருத்தம் – வெளியானது புதிய விலை திருத்தப்பட்டியல்!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின!

ஆனி 20, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 சிறுவர்கள் உட்பட 18 பேர் பலி!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் இன்று வவுனியாவில் ஆரம்பமானது!

வைகாசி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube