நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக தலவாக்கலையில் இருந்து பூண்டுலோயா செல்லும் பிரதான வீதியில் மடக்கும்புர புதுக்காடு பகுதியில் இன்று (04) காலை பாரிய மரம் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பாடசாலை மாணவர்கள், தொழிலுக்குச் செல்பவர்கள் மிகவும் அவதியுறும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வட்டக்கொடை வரையிலுமான போக்குவரத்து இடம்பெறுவதுவாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இப்பாதை சரி செய்யும் வரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
