Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரணை முதியோர் இல்ல தீப்பரவலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

ஆனி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹொரணை – அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் இயங்கி வந்த முதியோர் பராமரிப்பு இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது.

தீ விபத்தில் படுகாயங்களுடன் ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், இன்று (05) வெள்ளிக்கிழமை மற்றுமொருவர் உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

இந்த முதியோர் பராமரிப்பு இல்லத்தில் நீர் மோட்டார் மற்றும் மல்டி பிளாக் ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 80 மெத்தைகளில் தீ பரவியதே இந்த விபத்திற்கு காரணம் என அரச ரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தேவிபத்தின் போது வளாகத்தில் இருந்த 70 நோயாளர்களின் 52 பேர் பொதுமக்கள் மற்றும் போலீசாரால் காயங்கள் இன்றி மீட்கப்பட்டன எனினும் 10 பேர் சம்பவ இடத்திலேயே கருகி உயிர் இழந்ததுடன் வைத்தியசாலைகள் அனுமதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

மீட்கப்பட்டவர்கள் இராணுவ உதவியுடன் கல்பாத்த பகுதியில் உள்ள மாற்று இல்லத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உப்பாலி பன்னிலகே, இந்த முதியோர் இல்லம் எந்த ஒரு அரசு நிறுவனத்தாலும் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்

இதனை அடுத்து பாதுகாப்பு நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இல்லத்தின் பணிப்பாளரை ஜூன் மாதம் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொரளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் பொலிஸார் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் – 50க்கும் மேற்பட்டோர் காயம்!

ஆனி 26, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானின் பதிலடி தீவிரம்: பல அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் என அறிவிப்பு!

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது!

ஆனி 18, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கான பயணத்தை அமெரிக்கத் துணை அதிபர் வான்ஸ் ரத்து செய்தார்!

ஆனி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube