பண்டாரவளை ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் சிவ விஷ்ணு யோகாப்பீட மாணவர்கள், முதலாவது சர்வதேச யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியா புறப்பட்டுள்ளனர்.
இந்தப் போட்டி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் ஜூன் 4 முதல் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க முகேஷ்கர், லதுர்ஷன், ரிதிகா, தயதிக்ஷான், பிரதிஷ் மற்றும் ஜீ. வாகிசன் ஆகிய மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களுடன் வழிகாட்டியாக யோகாசன போதனாசிரியர் யோகா குருஜீ தருமயோகி யோகச்சந்திரனும் பயணமாகியுள்ளார்.
சர்வதேச அரங்கில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவுள்ள மாணவர்களுக்கும், அவர்களின் பயிற்சியாளருக்கும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
