Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரண விசாரணைகள் தீவிரம்

ஆடி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, சம்பவம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கைத்துப்பாக்கியை, மேலதிக விசாரணைக்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக, மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த விஜேசேகர தெரிவித்தார்.

நீதிமன்றத்துக்கு விடயங்களை அறிக்கைப்படுத்தியதன் பின்னர், குறித்த துப்பாக்கியை எதிர்வரும் திங்கட்கிழமை பகுப்பாய்வாளரிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சி.டி. விக்ரமரத்னவின் இறுதிக்கிரியைகளை திங்கட்கிழமை (20) நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அவரது பூதவுடலை கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, இந்தச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக, மாலபே, தலாஹேனவிலுள்ள அவரது இல்லத்துக்கு வருகை தந்த நபர்கள் தொடர்பிலும், வீட்டிலுள்ள சிசிடிவி காட்சிகளை மையப்படுத்தியும் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

மாலபே, தலாஹேனவிலுள்ள தமது இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் மீட்கப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அவரது மார்பின் வலது பக்கத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் பதிவாகியிருந்தது.

தனது மெய்ப்பாதுகாவலரின் கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என பொலிஸ் விசாரணை பிரிவு சந்தேகிக்கிறது.

இந்த மரணம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, சி.டி. விக்ரமரத்னவின் மனைவியிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இதன்போது, மகனின் நீதிமன்ற விவகாரம் ஒன்று காரணமாக தனது கணவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து மேல் மாகாண தெற்கு வலய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மாலபே பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

கட்டார் அமீருக்கு பிரதமர் ஹரிணி இரங்கல்!

ஆடி 16, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

AI மனிதர்களின் புத்தி கூர்மையையும் சிந்திக்கும் திறனையும் மழுங்கடிக்கச் செய்கிறது!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்!

ஆனி 26, 2026
இலங்கைவானிலை

பல பகுதிகளில் மழை; பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை!

ஆனி 30, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube