Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு ஒழுக்கக்கோவை – வெளியிடப்பட்டது புதிய வர்த்தமானி!

ஆனி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டின் ஊடகத் துறையில் பணியாற்றும் உயர்தொழிலாளர்களுக்கான தொழில்சார் நியமனங்களை அறிமுகப்படுத்துவதற்கும், அவற்றை பாதுகாப்பதற்கும் “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம் பெற்ற நிறுவகம்” எனும் புதிய அமைப்பைத் தாபிப்பதற்கான சட்டமூலம் அரசாங்க விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் (05) ஆம் திகதியன்று இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தின்படி, புதிய நிறுவகமானது சுயாதீனமாக இயங்கும் ஒரு கூட்டுத்தாபனமாக அமையவுள்ளதுடன், முக்கிய குறிக்கோள்களைக் கொண்டு செயற்படவுள்ளது.

ஊடகத்துறையில் பணியாற்றும் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பதிப்பாசிரியர்கள், தொகுப்பாளர்கள், ஒளிபரப்பாளர்கள், ஊடக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புகைப்படப்பிடிப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து உயர்தொழிலாளர்களையும் ஒரே தொழில்சார் ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டுவருதல்.

தகைமை வாய்ந்த ஊடகவியலாளர்களை உறுப்பினர்களாக நிரலிற் சேர்த்தல் மற்றும் அவர்களின் தராதரங்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரமளித்தல்.

ஊடகக் கல்வி, பயிற்சி நெறிகள் மற்றும் பரீட்சைகளை நடாத்தி, சர்வதேச ஊடகப் போக்குகளுக்கு ஏற்ப ஆராய்ச்சிகளை முன்னெடுத்தல்.

அனைத்து உறுப்பினர்களும் மாணவர்களும் பின்பற்றுவதற்கென விசேட நடத்தைக் கோவையொன்றைத் தயாரித்து, தொழில்சார் ஒழுக்காற்றைப் பேணுதல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் இந்த நிர்வகத்தின் நிருவாகக் கருமங்களை முகாமைத்துவம் செய்வதற்காக 15 உறுப்பினர்களைக் கொண்ட ஆளும் பேரவையொன்று நியமிக்கப்படவுள்ளது.

இதில் ஊடகத்துறையில் தகைமையும் அனுபவமும் மிக்க 8 பேர் தேர்தல் மூலமும், 7 பேர் நியமனம் மூலமும் உள்வாங்கப்படுவர்.

ஆளும் பேரவை முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் வரை, தற்காலிகமாக “இடைக்காலப் பேரவை” ஒன்று அமைச்சரினால் நியமிக்கப்படும். இந்த இடைக்காலப் பேரவையில் அமைச்சின் செயலாளருடன், ஊடகத்துறையில் ஆகக்குறைந்தது 20 வருட அனுபவம் வாய்ந்த 6 நிபுணர்கள் இடம்பெறுவர் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காவத்தை நீலகாமம் தோட்ட மக்களுக்காக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்..

வைகாசி 3, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

சாமானிய மக்களின் அரசாக தவெக செயல்படும் – விஜய்

வைகாசி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகமாக பரவி வரும் எபோலா வைரஸ் – சர்வதேச பொதுச் சுகாதார அவசரநிலை அறிவிப்பு!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

16 வயது சிறுவனை தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube