வெல்லவாய பகுதியில் கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள கஞ்சா தொகையொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவ புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் செழிப்பாக வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சோதனை நடவடிக்கை இடம்பெற்ற வேளையில் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து கஞ்சா செடிகளும் தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸாரும் இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
