Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆசிரியர் இடமாற்றம் கோரி நானாட்டான் டிலாசால் கல்லூரி முன் ஆர்ப்பாட்டம்!

ஆனி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நானாட்டான் டிலாசால் கல்லூரியில் ஊடகம் தொடர்பான கற்கை ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யக் கோரி பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும் மாணவர்களின் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் இணைந்து அமைதி வழியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒற்றை மேற்கொண்டனர்

இந்த ஆர்ப்பாட்டமானது இன்று எட்டாம் திகதி காலை 8 மணியளவில் பாடசாலைக்கு முன்பாக நடைபெற்றது

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
குறித்த ஆசிரியர் பாடசாலைக்கு நியமிக்கப்பட்டதில் இருந்து ஊடகம் தொடர்பான கற்றலில் பின்நோக்கி காணப்படுகிறது மாணவர்கள் விருப்பமுற்று ஊடக கற்றலுக்கு செல்ல மறுக்கிறார்கள் குறித்த ஆசிரியர் பாடசாலை நிர்வாகத்திற்கும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினருக்கும் ஒத்துழைப்புகள் வழங்குவதில்லை நிர்வாகச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக குழப்பத்தை விளைவித்து வருவதாகவும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் பழைய மாணவர்கள் குறித்த ஆசிரியர் மீது குற்றச்சாட்டினை முன் வைக்கிறார்கள்

குறித்த ஆசிரியர் தொடர்பில் சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை அதனால் இந்த அமைதி வழியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பழைய மாணவர்கள் மற்றும் அபிவிருத்தி சங்கத்தினர் தெரிவித்தார்கள்

இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கல்வி அதிகாரிக்கும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் அவர்களுக்கும் மகஜர் கையளிக்கப்பட்டது

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் பழைய மாணவர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பித்தக்கது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

2 மணிநேர பளு தூக்கும் பயிற்சி: ஆயுளை நீட்டிக்கும் எனப் புதிய ஆய்வில் தகவல்!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டியில் 5 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 3 தொழிலாளர்கள் படுகாயம்!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாகன இறக்குமதிக்கு 50 வீத வரி! சிற்றூந்துகளின் விலை மேலும் அதிகரிப்பு

வைகாசி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube