Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெரும்போக உர விநியோகம் குறித்து கலந்துரையாடல்!

Maha Season Fertilizer Supply Fertilizer Companies Agriculture Farming Crop Season Fertilizer Distribution Sri Lanka Agriculture Food Security

ஆனி 9, 2026
படிக்க 2 நிமிடங்கள்

சிறுபோகத்திற்கான உர விநியோக நிலைமையை மீளாய்வு செய்தல், பெரும்போகத்திற்கான உர இறக்குமதி மற்றும் விநியோக தயார் நிலை குறித்து உர நிறுவனங்களுடனான கலந்துரையாடல், கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்றது.

உர இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பாக உர நிறுவனங்களின் தயார் நிலை குறித்து இதன்போது கேட்டறிந்த ஜனாதிபதியின் செயலாளர், அதற்காக அரசாங்கத்திடமிருந்து கிடைக்க வேண்டிய ஒத்துழைப்புகள் குறித்தும் ஆராய்ந்தார்.

பெரும் போகத்திற்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி உரிய முறையில் உரங்களை வழங்குவதற்காக, உர இறக்குமதி மற்றும் விநியோக செயல்முறைகளை கால அட்டவணையின்படி மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து இங்கு விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் பெரும் போகம் ஆரம்பமாகும் போது, விவசாயிகளுக்கு உரிய முறையில் உரங்களை விநியோகித்தல் மற்றும் உர இறக்குமதியின் போது உலக சந்தையில் உர விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு, உர இறக்குமதி செய்வதற்கான திட்டமொன்றைத் தயாரிப்பதற்கும், ஜூலை மாத ஆரம்பத்தில் அதன் முன்னேற்றத்தை ஆராய்வதற்கும் இங்கு அனைத்துத் தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மேலதிக செயலாளர் ஜானகி அமரதுங்க உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், அரச உர நிறுவனத்தின் தலைவர் பி. சி. டபிள்யூ. சேதுகே, CIC விவசாய உற்பத்தி தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் சுஜீவ விஜயவீர, நியூ லங்கா கொமர்ஷல் உர நிறுவனத்தின் பணிப்பாளர் ஈ.கே. சிசிர குமார, ஹேலீஸ் உர நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சமுத்ர ராஜபக்ஷ, எலைட் உர நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்சித் அபேசிங்க மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

சினிமாமுக்கியச் செய்திகள்

17 வருடங்களுக்குப் பிறகு ரேணிகுண்டா 2 : வெளியானது

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் எனக்கு முன்னுரிமையளிக்கப்படவில்லை – மஹிந்த சமரசிங்க

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு மையங்களில் மூன்றில் ஒரு பங்கு மாத்திரமே முறையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது – ஐக்கிய நாடுகள் உபகுழு

ஆவணி 16, 2026
இலங்கைஎங்கள் ஊர்

வடக்கு மீனவர்களுக்கு கடல் அட்டை வளர்ப்பு திட்டம்!

ஆடி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube