Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாமுக்கியச் செய்திகள்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை – முதலமைச்சர் விஜய்!

ஆனி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மறைந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் உடலுக்கு, முதலமைச்சர் விஜய் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தியுள்ளதுடன், அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முழு அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராகவும், கிராமிய சினிமாவின் முன்னோடியாகவும் போற்றப்பட்ட பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக காலமான நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் மற்றும் கலைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாரதிராஜாவின் கலைப் பங்களிப்புகளையும், தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய மகத்தான சேவையையும் கௌரவிக்கும் வகையில், அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது X தளப் பதிவில் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளதாவது,

“தமிழ்த் திரையுலகின் இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைந்தேன்.

கிராமியப் பின்னணியில் வாழ்வியல் உயிரோட்டத்துடன் பல வெற்றிப் படங்களை உருவாக்கி, தமிழ்த் திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்கள்.

தனது படைப்புகளுக்காக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு தேசிய மற்றும் மாநில விருதுகளைப் பெற்றவர். பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது பங்களிப்பு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

இயக்குநர் இமயம் திரு. பாரதிராஜா அவர்களின் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

திரைத்துறையில் திரு. பாரதிராஜா அவர்களின் மகத்தான பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

கிரேட் நிகோபார் திட்டம் தொடர்பில் ராகுல் காந்தி கடும் விசனம்!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“டுபாய் சுதா”விடம் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டீர்களா? உடனே இந்த இலக்கத்திற்கு அழையுங்கள்!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு காய்ச்சலினால் இதுவரை 42 பேர் உயிரிழப்பு!

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

ஆனி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube