Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டியில் சுரங்கப் பாதைகளை தவிர்ப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை

ஆனி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சுரங்கப் பாதைகளைப் பயன்படுத்தாமல், முறைசாரா முறையில் பிரதான வீதிகளைக் கடக்கும் பாதசாரிகளுக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்குக் கண்டி பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

கண்டி நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதைகளைப் பயன்படுத்தாமல், ஆபத்தான முறையில் வீதிகளைக் கடப்பது தற்போது பாரியதொரு பிரச்சினையாக மாறியுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நகரத்திற்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பிற்காகப் பெருமளவிலான செலவில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதைகள் இருக்கும் நிலையிலும், சிலர் அவற்றை தவிர்ப்பதன் காரணமாக வீதி விபத்துக்களின் அபாயமும் போக்குவரத்து நெரிசலும் அதிகரிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பாகக் கண்டி பொலிஸார் குறிப்பிடுகையில், சட்டவிரோதமான முறையில் வீதிகளைக் கடக்கும் நபர்களுக்கு எதிராகத் தராதரம் பாராது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

இதற்கமைய, பாதசாரி கடவைகள் மற்றும் சுரங்கப் பாதைகளுக்கு அருகில் விசேட பொலிஸ் குழுக்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக அபராதம் விதித்தல் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் கண்டி பொலிஸார் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அதி அபாய டெங்கு வலயங்களாக 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அறிவிப்பு!

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

94 சீன பிரஜைகளுக்கு 70 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிப்பு

ஆவணி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெல்லாவெளியில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல் – இரு பொலிசர் படுகாயம்

ஆவணி 7, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

ராகமையில் காவல்துறை ஊரடங்கு சட்டம் அமுலில்!

ஆவணி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube