Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

பூனாவையில் பேருந்து மோதி விபத்து – ஆசிரியை உயிரிழப்பு

ஆனி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பூனாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம்–கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புகொல்லேவ பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூனாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (18) வியாழக்கிழமை காலை, கண்டியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியை நிலை குலைந்து கீழே விழுந்ததுடன், பின்னர் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பூனாவை, கல்கந்தேகம வித்தியாலயத்தில் ஆசிரியையாக பணியாற்றிய 56 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பூனாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுதினம் இப்போது திருவிழாக்களாக மாற்றப்பட்டுள்ளது – அருட்தந்தை மா.சத்திவேல்!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிலாபம் – ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்தவிற்கு 5½ ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற மாத்திரைகள் இந்தியாவில் பறிமுதல்!

வைகாசி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube