Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா – ஈரான் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று சுவிட்சர்லாந்தில் ஆரம்பம்!

ஜூன் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான முதற்கட்டப் பேச்சுவார்த்தை இன்று வெள்ளிக்கிழமை (19) சுவிட்சர்லாந்தின் பேர்கன்ஸ்டாக் நகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து முதற்கட்டமாக ஆராய்வதே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும்.

பரிந்துரைக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கும் மேலதிகமாக மத்தியஸ்தர்களாக கத்தார் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் கலந்துகொள்ளவுள்ளன.

இதேவேளை, இச்சந்திப்பு நடைபெறவுள்ள கால அட்டவணை அல்லது இதில் உள்ளடக்கப்பட்டுள்ள விரிவான விடயங்கள் குறித்து இதுவரையில் வேறு எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை என சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தை உலுக்கியுள்ள போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கையெழுத்தாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்கள் பாம்பனில் பறிமுதல்

ஜூலை 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தங்களது பணிகளில் இருந்து விலக தீர்மானம்

ஆகஸ்ட் 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுரைச்சோலை மின் நிலையம் இன்று மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என எதிர்பார்ப்பு

அக்டோபர் 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தும்பர போகம்பர சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பு!

ஆகஸ்ட் 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube