Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலை மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்!

ஆனி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பாதுக்கை, வட்டரக்க திறந்தவெளி சிறைச்சாலையின் பாடசாலையில் கல்வி கற்ற, தடுப்புக்காவலில் உள்ள 6 மாணவர்கள், இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த முறையில் சித்தி பெற்று உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.

கைதிகளுக்காகவே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட இலங்கையின் ஒரேயொரு பாடசாலையான வட்டரக்க பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மத்திய நிலையத்தில் இம்மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் பல்வேறு சிறு குற்றங்கள் தொடர்பில் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

வட்டரக்க சிறைச்சாலையில் உள்ள இந்த பாடசாலையானது, கடந்த 2014ஆம் ஆண்டு சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் கல்வித் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறைச்சாலை அத்தியட்சகர் ரோஹித செனரத் மஹாநாம,

பாடசாலைக்குச் செல்ல முடியாமல் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவர்களை இலங்கையின் பல்வேறு நீதிமன்றங்கள் எமக்கு அனுப்பி வைக்கின்றன.

அவர்கள் வெவ்வேறு கல்வி மட்டங்களைச் சேர்ந்தவர்கள். நாம் அவர்களுக்கென ஒரு விரைவான கல்வி முறையைத் தயாரித்து கல்வியை வழங்குகிறோம்.

இது ஒரு விசேட தரத்திலான அரச பாடசாலையாகும். இங்கு அதிபர் ஒருவரும் ஆசிரிய குழாமினரும் உள்ளனர். பிள்ளைகளின் கல்வி மட்டங்களுக்கு ஏற்ப நாம் கல்வியை வழங்குகிறோம். இம்முறை நாம் 6 மாணவர்களை பரீட்சைக்கு உட்படுத்தியிருந்தோம். அவர்கள் அனைவரும் சிறந்த முறையில் சித்தி பெற்று உயர்தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர் என குறிப்பிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இந்த விலைக்கு இப்படி ஒரு 5G Phone ஆ? Lava Shock கொடுத்தது!

வைகாசி 19, 2026
முக்கியச் செய்திகள்

வழமைக்கு திரும்பியது பேஸ்புக்

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெசாக் பண்டிகை- எரிபொருள் கட்டுப்பாடுகளில் தளர்வு

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசு விவசாயிகளை பாதிப்புக்குள்ளாக்கும் கொள்கைகளைப் பின்பற்றுகிறது – ஹர்ஷ டி சில்வா

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube