Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

closed

ஆனி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்
2026 ஆம் ஆண்டு பொசன் பூரணை போயா தினம் மற்றும் தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பிரேமரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதன்படி, ஜூன் 29 ஆம் திகதி பொசன் போயா தினத்தை முன்னிட்டு, ஜூன் 28 ஆம் திகதி இரவு மதுபானசாலைகள் மூடப்படும் நேரம் முதல் ஜூன் 30 ஆம் திகதி காலை திறக்கப்படும் நேரம் வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும், அநுராதபுரத்தை மையமாகக் கொண்ட தேசிய பொசன் வாரத்தை முன்னிட்டு, ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை பின்வரும் 4 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள மதுபானசாலைகளும் மூடப்படும்.

இதற்கமைய, இப்பகுதிகளிலுள்ள மதுபானசாலைகள் ஜூன் 25 ஆம் திகதி இரவு முதல் ஜூலை 3 ஆம் திகதி காலை வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளை மீறிச் செயற்படும் மதுபானசாலைகள் குறித்து 1913 என்ற 24 மணி நேர அவசர தொலைபேசி இலக்கத்திற்குத் தகவல் வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மதுவரி திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் ஏ.ஏ. ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

உயிர் போனாலும் கவலையில்லை! – ஸ்பெயினின் சியூட்டாவுக்குள் நுழைந்த மொரோக்கோ இளைஞர்கள்

ஆவணி 1, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

தனுஷின் அரசியல் வருகை குறித்து மீண்டும் பரவும் பேச்சு!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆகஸ்ட் 17

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பூனைக்குட்டிகளுக்கு பெயர்வைக்க உங்களுக்கும் ஒரு வாய்ப்பு

ஆடி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube