நச்சு போதைப்பொருள் ஆபத்திலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்காக செயல்படுத்தப்படும் தேசிய நடவடிக்கையின் பிரதான அலுவலகமும் ஊடக மையமும் இன்று (26) பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் திறக்கப்பட உள்ளது.
ஜூன் மாதம் 26 ஆம் திகதியன்று கடைப்பிடிக்கப்படும் ‘போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்துடன் இணைந்து, நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் சிறப்பு வேலைத்திட்டங்கள் பலவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இளைஞர் தலைமுறையை போதைப்பொருள்களிலிருந்து விடுவித்து பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இந்த தேசிய திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் திகதி ஜனாதிபதியின் தலைமையில் கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் ஆரம்பிக்கப்பட்டது.
