வீடற்ற குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இந்த வருடத்திற்குள் 17,000 புதிய வீடுகள் கட்டப்படும் என அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பாதுக்கை பகுதியில் கட்டப்பட்ட புதிய வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 4 புதிய வீடுகள் கையளிக்கப்பட்டன.
மேலும், இந்நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரின் பங்கேற்புடன் புதிய வீடு ஒன்றைக் கட்டுவதற்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது.
