Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ் வடமராட்சியில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 25 பவுன் நகை கொள்ளை!

வைகாசி 31, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இரு வீடுகளில் ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 25 பவுன் நகைகள் களவாடப்பட்டுள்ளன.

வல்வெட்டித்துறை பகுதியிலுள்ள வீடென்றல் புகுந்து திருடர்கள் அந்த வீட்டில் இருந்த ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் பணத்தினை திருடிச் சென்றுள்ளனர்.

வீட்டின் சமையலறை ஊடாக புகுந்து பணத்தை பணத்தை கொள்ளையிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த வீட்டு உரிமையாளர் சீட்டு பிடிக்கும் தொழில் செய்பவர் என்றும், நேற்றைய தினம் சனிக்கிழமை சீட்டு பணத்தொகை சேர்க்கப்பட்ட நிலையில், ஒரு கோடியே 15 இலட்சம் ரூபாய் பணத்தை தனது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை உடுப்பிட்டி பகுதியில் வீடு ஒன்றினுள் புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 25 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

வீட்டு உரிமையாளர் காலையில் எழுந்த போது வீட்டின் முன் பக்க கதவுகள் திறந்து இருப்பதனை அவதானித்து, காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க மத்திய ஃப்ளோரிடா கடற்பகுதியில் தனியார் விமானமொன்று விபத்திலுள்ளானது!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நானுஓயாவில் தொடர் குடியிருப்பின் மீது லொரி ஒன்று மோதி விபத்து!

சித்திரை 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு சின்ன ஊறணி ஆதி பேச்சி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் ஆரம்பம்!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாறை – திருக்கோவிலில் காட்டு யானை தாக்குதலுக்கு ஒருவர் பலி!

வைகாசி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube