Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொசன் தானசாலைகளில் பிளாஸ்டிக், பொலித்தீன்களுக்கு தடை!

ஆனி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எதிர்வரும் பொசன் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தானசாலைகளில் உணவு மற்றும் பானங்களைப் பரிமாறும்போது பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பயன்படுத்துவதைத் முழுமையாகத் தவிர்க்குமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

எனவே பிளாஸ்டிக் அல்லது பொலித்தீன் கொள்கலன்களில் சூடான உணவு மற்றும் பானங்களைப் பரிமாறும் தானசாலைகளை சுகாதார அதிகாரிகள் தீவிரமாக உன்னிப்பாகக் கண்காணித்து, ஆய்வு செய்வார்கள்.

எனவே சூடான மற்றும் குளிர்ந்த உணவுகளை பொலித்தீன் உறைகளில் சேமித்து வைப்பது கடுமையான சுகாதாரக் சீர்கேடுகளை விளைவிக்கும் என்பதால், அமைப்பாளர்கள் இதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹனா கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் இந்த ஆண்டு பொசன் பண்டிகைக்காக நாடு முழுவதும் பெருமளவிலான தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த எண்ணிக்கை கடந்த வெசாக் பண்டிகையின்போது பதிவு செய்யப்பட்ட தானசாலைகளை விட அதிகமாகும்.

எனவே இவற்றில் அதிகளவிலான தானசாலைகள் வட மத்திய மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வீசப்படும் கொள்கலன்களில் நீர் தேங்கி, அவை டெங்கு கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக மாறக்கூடும். எனவே, பொதுமக்களும் அமைப்பாளர்களும் குப்பைகளை மிகவும் பொறுப்புடன் அப்புறப்படுத்த வேண்டும்,” என உபுல் ரோஹனா எச்சரித்துள்ளார்.

மேலும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களைக் குறைக்கும் பொருட்டு, இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களும் அமைப்பாளர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மஸ்கெலியா வைத்தியசாலை ஊழியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து பணிப்பகிஷ்கரிப்பு!

சித்திரை 30, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

மாலைத்தீவு ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு!

ஆனி 5, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

விஜய்க்கு ஆதரவாக கமல் ஹாசன் பதிவு…!

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube