Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாடு முழுவதும் 18,000 க்கும் அதிகமான தானசாலைகள் பதிவு!

ஜூன் 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் இதுவரையில் 18,000 க்கும் அதிகமான தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHI) தெரிவித்துள்ளது.

நேற்று (27) மாலை வரையான காலப்பகுதிக்குள் நாடு முழுவதும் 18,129 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட தெரிவித்தார்.

சுகாதார வழிகாட்டல்களுக்கு இணங்க நாளை (29) மற்றும் நாளை மறுதினம் (30) நடத்தப்படும் தானசாலைகள் அனைத்தும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என அவர் வலியுறுத்தினார். அத்துடன், பொசன் வலயங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படும் வர்த்தக நிலையங்கள் மற்றும் தற்காலிக வியாபார இடங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் இந்த வாரம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளன.

இம்முறை அனுராதபுர புண்ணிய பூமியை மையமாகக் கொண்டு நேற்றைய தினமாகும்போது 200 க்கும் அதிகமான தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமில் முத்துகுட குறிப்பிட்டார்.

அனுராதபுர நகரை சூழவுள்ள பகுதிகளில் உணவு சுகாதாரம் மற்றும் தொற்றா நோய்களைத் தடுப்பது குறித்தான விசேட வேலைத்திட்டம் ஒன்று அனுராதபுர மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய தானசாலைகளை நடத்தும் அமைப்பாளர்களுக்குத் தேவையான அறிவுறுத்தல்கள் மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினால் வழங்கப்பட்டுள்ளன என்றும், அதற்கமைய அவர்கள் பொறுப்புடன் செயற்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகுட மேலும் வலியுறுத்தினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முகநூல் களியாட்ட விருந்துகள் நடைபெறும் இடங்களை கண்காணிக்க விசேட நடவடிக்கை

செப்டம்பர் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிண்ணியா பகுதியில் வறட்சியினால் பல குடும்பங்கள் பாதிப்பு

செப்டம்பர் 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அலகொல்லையில் 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

செப்டம்பர் 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிலாபம் கடற்பரப்பில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு!

ஜூலை 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube