மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான WhatsApp, நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட Username வசதியை கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளது.
இந்த புதிய வசதியின் மூலம், பயனர்கள் தங்களுக்கான தனித்துவமான Username-ஐ முன்கூட்டியே பதிவு செய்து வைத்துக்கொள்ள முடியும். இதனால், எதிர்காலத்தில் புதிய நபர்களுடன் தொடர்புகொள்ளும் போது தொலைபேசி எண்ணை பகிர வேண்டிய அவசியம் பல சந்தர்ப்பங்களில் இருக்காது.
புதிய வசதி கிடைத்துள்ள பயனர்கள், Settings > Account > Username என்ற பகுதிக்குச் சென்று தங்களின் விருப்பமான Username-ஐ பதிவு செய்யலாம்.
இந்த அம்சம் தற்போது கட்டம் கட்டமாக வெளியிடப்பட்டு வருவதால், அனைத்து பயனர்களுக்கும் இன்னும் கிடைக்காமல் இருக்கலாம்.
இது தொடர்பாக மெட்டா தெரிவித்துள்ளதாவது:
*”Username வசதி முழுமையாக அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, புதிய நபர் அல்லது வணிக நிறுவனத்துக்கு முதன்முறையாக செய்தி அனுப்பும் போது, நீங்கள் Username-ஐ பயன்படுத்தும் வகையில் அமைத்திருந்தால், உங்கள் தொலைபேசி எண் அவர்களுக்கு தெரியாது. சமீபத்திய WhatsApp பதிப்பில் Settings > Account > Username பகுதிக்குச் சென்று சில நொடிகளில் Username-ஐ பதிவு செய்யலாம். இந்த வசதி வரும் மாதங்களில் படிப்படியாக அனைத்து நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும். உங்கள் நாட்டில் கிடைக்கும்போது WhatsApp மூலம் உங்களுக்கு அறிவிக்கப்படும்.” என தெரிவித்துள்ளது
