பசறை, கோணக்கலை தமிழ் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், கடந்த 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் பழைய மாணவர்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டித் தொடர் சிறப்பாகவும் உற்சாகமாகவும் நடைபெற்றது.
முன்னாள் அதிபர்கள் நடனசபாபதி – இளங்கோபன் ஞாபகார்த்தமாக இப்போட்டி நடத்தப்பட்டது.
1990 ஆம் ஆண்டு முதல் வித்தியாலயத்தில் கல்வி கற்ற பெரும்பாலான பழைய மாணவர்கள் முதன்முறையாக ஒன்றுகூடி, இப்போட்டிகளில் உற்சாகத்துடன் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.
பாடசாலையின் வளர்ச்சிக்காக பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இத்தொடரில் மொத்தம் 22 பழைய மாணவர் வகுப்பு அணிகள் பங்கேற்றன.
போட்டியின் இறுதியில் இளங்கதிர் ஃபெமிலி அணி சாம்பியன் கிண்ணத்தை வென்றது. டயஸ் தலைமையிலான 2015 ஆம் ஆண்டு அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது. Rcc அணியினர் மூன்றாமிடத்தை பிடித்தனர்
இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க செயலாளர் பழனி கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாடசாலை வளர்ச்சிக்காக தொடர்ந்து பங்களித்து வரும் பழைய மாணவர்களுக்கு வித்தியாலய அதிபர் சுப்பிரமணியம் ரமேஸ் தனது வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

