கத்தார் வெளியிட்ட தகவலின் படி, தோஹாவில் நடைபெற்ற மறைமுக தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகளில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே “நல்ல முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, உலக சந்தையில் எண்ணெய் விலைகள் மீண்டும் சரிவு பாதையில் சென்றுள்ளன.
பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் விலை, 01:02 GMT நிலவரப்படி, 73 சென்ட் (1.02%) குறைந்து ஒரு பீப்பாய்க்கு 70.84 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்காவின் West Texas Intermediate (WTI) கச்சா எண்ணெய் 83 சென்ட் (1.21%) சரிந்து ஒரு பீப்பாய்க்கு 67.75 அமெரிக்க டொலராக விற்பனையாகியுள்ளது.
முந்தைய வர்த்தக அமர்விலும் இரு முக்கிய எண்ணெய் அளவுகோல்களும் 1% க்கும் மேல் வீழ்ச்சி கண்டிருந்தன. இதனால் கடந்த நான்கு மாதங்களில் காணப்பட்ட மிகக் குறைந்த நிலையை அவை மீண்டும் எட்டியுள்ளன.
