Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பானங்களுக்கான சர்க்கரை அளவு வண்ணக் குறியீட்டு விதிமுறைகளில் திருத்தம்

#SugarTax #SugarLabeling #FoodRegulation #HealthPolicy #PublicHealth #Nutrition #FoodSafety #SriLanka #HealthAwareness #PolicyUpdate

ஆடி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் திரவ நிலை பானங்களுக்கான கட்டாய சர்க்கரை அளவு வண்ணக் குறியீட்டு விதிமுறைகளில் அரசாங்கம் புதிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் உணவுச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திருத்தங்கள், அண்மையில் (ஜூன் 23) அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

நுகர்வோர் சர்க்கரையின் அளவை எளிதாக அடையாளம் காண்பதற்கான தற்போதைய வண்ணக் குறியீட்டு அளவீடுகள் மாற்றமின்றி அப்படியே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது:

சிவப்பு நிறம்: 100 மில்லிலிட்டருக்கு 8 கிராமிற்கும் அதிகமான சர்க்கரை.

மஞ்சள்) நிறம்: 100 மில்லிலிட்டருக்கு 2.5 கிராம் முதல் 8 கிராம் வரையிலான சர்க்கரை.

பச்சை நிறம்: 100 மில்லிலிட்டருக்கு 2.5 கிராமிற்கும் குறைவான சர்க்கரை.

சாதாரண செவ்வக வடிவ லேபிளை ஒட்டுவதற்குப் போதிய இடவசதி இல்லாத கண்ணாடிப் போத்தல்களுக்கு (Glass bottles), மாற்று வடிவமாக ‘வட்ட வடிவ’ லேபிளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது புழக்கத்திலிருக்கும் பழைய கண்ணாடிப் போத்தல்களின் மூடிகளில் (Cap) இந்த வண்ணக் குறியீட்டைப் பொறிப்பதற்கான கால அவகாசம் 2026 ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்படாமல், பிற உணவு உற்பத்திகளுக்காகவோ அல்லது மறுவிற்பனைக்காகவோ வர்த்தகங்களுக்கு இடையே (Business-to-Business) பரிமாற்றப்படும் உணவுப் பொருட்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

சிறு தோட்ட உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண தீர்மானம்!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையை வந்தடைந்தது ‘மெயின் ஷிப் 6’ அதிநவீன சொகுசுக் கப்பல் !

வைகாசி 21, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சட்டவிரோத கடல் அட்டை வேட்டை; நால்வர் சிக்கினர்!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பு விலை 18.5% உயர்வு!

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube