Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

80 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 40 பேர் பலி!

#Pakistan #BusAccident #Tragedy #RoadAccident #BreakingNews #SouthAsia #AccidentNews #Condolences #TamilNews #Disaster

ஆடி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 40 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்வா மாகாணங்களின் எல்லையில் அமைந்துள்ள செஹ்ரானி-சோப் நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ் குவெட்டாவில் இருந்து பெஷாவர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

அந்த பஸ்சில் பழுதடைந்த மற்றொரு பஸ்சின் பயணிகள் உள்பட 48 பயணிகள் இருந்தனர்.

டானாசாரில் பகுதியில் பஸ் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து 80 அடி பள்ளத்தில் விழுந்தது.

தகவலறிந்த பொலிஸார் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கரடுமுரடான மலைப்பகுதி என்பதால் மீட்புப்பணியில் சிரமம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். உயிரிழந்தோர் சடலங்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு வருகிறது.

பஸ் விபத்தில் பலியானோருக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார்விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்கவை சந்தித்த வீட்டு வேலைத் தொழிலாளர் சங்கம் !

ஆடி 15, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

மோடியை சந்திக்கும் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தனியார் பேருந்து ஒன்று 7 வாகனங்களுடன் மோதி விபத்து – பெண் ஒருவர் பலி!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உள்நாட்டு வர்த்தகர்கள் வெளிநாடு செல்லும் சூழல் உருவாகியுள்ளது – புஷ்பகுமார கருணாரத்ன!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube