சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சபரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் இன்று (04) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் பிரதமரும் கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாக கலந்துகொள்கிறார்.
சவூதி அபிவிருத்தி நிதியத்தின் (Saudi Fund for Development) 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியுடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் கீழ் நவீன மருத்துவ பீடக் கட்டிடம், மாணவர் விடுதிகள், நூலகம், 1,000 ஆசனங்களைக் கொண்ட கேட்போர் கூடம் மற்றும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் பேராசிரியர் பிரிவு ஆகியன அமைக்கப்பட்டுள்ளன.
இது இலங்கையின் 10ஆவது மருத்துவ பீடமாகும். மருத்துவக் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதோடு, நாட்டில் நிலவும் சுகாதாரத் துறை மனிதவள பற்றாக்குறையை சமாளிக்கவும் இந்தப் பீடம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
