Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு தீவிரம்: 3 நாட்களில் 3,422 பேர் பாதிப்பு!

ஆடி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் டெங்கு காய்ச்சல் பரவல் இந்த ஆண்டு வேகமாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (03) நள்ளிரவு வரையிலான தரவுகளின்படி, நாடு முழுவதும் 58,810 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 39 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. தற்போது டெங்குவின் உயிரிழப்பு விகிதம் 0.07% ஆக உள்ளது.

இந்த ஆண்டில் அதிகபட்சமாக கடந்த ஜூன் மாதத்தில் 21,547 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மே மாதத்தில் 8,590 பேரும், ஜனவரியில் 7,866 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில், ஜூலை மாதத்தின் முதல் மூன்று நாட்களிலேயே 3,422 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளமை கவலைக்கிடமானதாகும்.

மாகாண வாரியாகப் பார்க்கையில், மேல் மாகாணம் 30,876 நோயாளர்களுடன் (52.50%) அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தென் மாகாணத்தில் 9,316 பேரும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,129 பேரும் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

மாவட்ட அளவில் கொழும்பில் 12,017 பேரும் (இதில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 2,514 பேர்), கம்பஹாவில் 11,740 பேரும், மாத்தறையில் 4,262 பேரும் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் 142 சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு பரவும் உயர் அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த, வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன், நீர் தேங்கும் இடங்களை அகற்றி நுளம்புகள் பெருகுவதைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முதல்வரை பதவி நீக்கும் வர்த்தமானிக்கு இடைக்காலத் தடை நீடிப்பு

ஆடி 15, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

சமந்தா தொகுத்து வழங்கும் புதிய சமையல் ரியாலிட்டி ஷோ

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவாசல ரயில் விபத்துக்கு காரணமான சந்தேக நபரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசாங்கத்தின் நிதிமுகாமைத்துவ குறைபாடுகளை சுட்டிக்காட்டி நிதியமைச்சின் வளாகத்தில் போராட்டம்!

சித்திரை 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube