அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் நேற்று (04) இரவு மாலைதீவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இக்கொலையைச் செய்த துப்பாக்கிதாரிகளுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இவர், மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
