காரைதீவு மாவடிப்பள்ளி பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த வளவுக்குள் புகுந்து மதிலை உடைத்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக காரைதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
