வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹயஸ் ரக வாகனம், பாதசாரி கடவையின் ஊடாக வீதியைக் கடக்க முயன்ற நபர் மீது மோதியதுடன், பின்னர் எதிர்திசையில் வந்த கார் ஒன்றும் அவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 55 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
