எண்டரமுல்ல பகுதியில் 2.325 கிலோ ஹெரோயினுடன் 35 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையின் பெறுமதி ரூ.30 மில்லியனுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்தளை, எண்டரமுல்ல சன்ஃபிளவர் கார்டன் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட நடவடிக்கைப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின் தொகை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த நபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவரின் போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக எண்டரமுல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
