காத்தான்குடி பிரதேசத்தில் மனித பாவனைக்கு உகந்ததல்லாத உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் உணவகங்கள் மற்றும் வெதுப்பகங்களில் சுகாதார அதிகாரிகளால் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, பல வர்த்தக நிலையங்களில் சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டமை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விதிமுறைகளை மீறிய பல வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சில நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
