Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

உரிய நடவடிக்கை இருந்தால் கலவரம் தவிர்ந்திருக்கும் – முஜிபுர்

#நாடாளுமன்றம் #சிறைச்சாலை #SriLanka #NegomboPrison #MujiburRahman #PrisonUnrest

ஆடி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தை ஆரம்பத்திலேயே தடுக்க முடிந்திருந்தும், உரிய நேரத்தில் உத்தரவு வழங்கப்படாததால் நிலைமை மோசமடைந்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், சிறைச்சாலை அதிகாரி ஒருவர், “உத்தரவு வழங்கப்பட்டிருந்தால் சம்பவத்தை ஆரம்பத்திலேயே தடுத்திருக்க முடியும். கைதிகளும் மனிதர்கள்தான்” என்று தெரிவித்திருந்ததை மேற்கோள்காட்டினார்.எளிதில் தடுக்கக்கூடிய சம்பவம் மோதலாக மாறிய பின்னரே கட்டுப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்காதது யார்? உரிய உத்தரவை வழங்கத் தவறியது யார்? என்ற கேள்வியை அரசிடம் முன்வைத்தார்.இலங்கையின் பல சிறைச்சாலைகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன என்றும், இது முதல் சம்பவமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் தொடர்பாக அரசின் தேசியக் கொள்கையிலேயே தீர்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், 2024ஆம் ஆண்டு முதல் இந்தப் பிரச்சினை குறித்து நீதி அமைச்சருக்கு அறிவிருந்தும் ஏன் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

எல் நினோவினால் பவளப்பாறைகளுக்கும் பாதிப்பு

புரட்டாதி 7, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

விண்வெளி வீரர்களின் மலம் மற்றும் சிறுநீரைச் சுத்திகரித்து மறுசுழற்சி புதிய தொழில்நுட்பம்

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு

புரட்டாதி 2, 2026

பசுவுக்கு அபயதானம் – நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube