நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பழைய போகம்பர சிறைச்சாலையை மீண்டும் சிறைச்சாலையாக அறிவித்து அரசாங்கம் வர்த்தமானி வெளியிட்டுள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானயக்காரவால் ஜூலை 8ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 138 ஆண்டுகள் இயங்கிய போகம்பர சிறைச்சாலை 2014ஆம் ஆண்டு மூடப்பட்டு, கைதிகள் பல்லேகலையில் உள்ள தும்பறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
