Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

சீனா- திபெத் விவகாரம் எங்கள் பிரச்சினை- 3வது நாடு தலையிடக் கூடாது என சீனா திட்டவட்டம்

#சீனா #திபெத் #சீனாதிபெத் #சர்வதேசஅரசியல் #வெளிநாட்டுஉறவுகள் #அரசியல் #உலகசெய்திகள் #BreakingNews #China #Tibet #ChinaTibet #InternationalRelations #WorldNews #NewsUpdate

ஆடி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி, தனி சுதந்திர நாடாக திகழ திபெத் விரும்புகிறது. அதேவேளையில், திபெத் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், சீனா- திபெத் விவகாரம் எங்கள் இருவருக்கும் இடையிலான பிரச்சினை. இதில் 3-வது நாடு தலையிடக் கூடாது என்று சீனா திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது.

தைவான் மற்றும் திபெத் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் பேசும் போதெல்லாம் சீனா அதற்கு தனது எதிர்ப்பை வலிமையாக தெரிவித்து வருகிறது.

நேற்றையதினம் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை, திபெத்தியர்களின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான அவர்களின் விருப்பங்களை அமெரிக்கா ஆதரிக்கிறது. அத்துடன் தலாய்லாமாவுடனான பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு சீனாவை வலியுறுத்துகிறோம் எனத் தெரிவித்திருந்தது.

அமெரிக்காவின் இந்த செயலுக்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மயோ நிங் கூறியதாவது:-

சீனாவின் ஒரு பகுதியாக ஷிசாங்கை (Xizang) அங்கீகரிப்பதாகவும், திபெத் சுதந்திரத்தை ஆதரிக்கவில்லை என்றும் அமெரிக்கா வாக்குறுதி அளித்துள்ளது. அந்த வாக்குறுதியை அது மதிக்க வேண்டும். ஷிசாங் தொடர்பான விவகாரங்களைப் பயன்படுத்தி சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு மயோ நிங் தெரிவித்தார்.

இருப்பினும், கடந்த 6ம் திகதி 91 வயதை எட்டிய திபெத்திய ஆன்மீகத் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்கா விடுத்த அழைப்புக்கு அவர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

80 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 40 பேர் பலி!

ஆடி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவாசல விபத்தினால் ரயில் மார்க்கக் கட்டமைப்பிற்கு 17 இலட்சம் ரூபா சேதம்

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

25 சிறிய நகரங்களை அபிவிருத்தி செய்ய 581 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

ஆனி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கடுமையான வெப்பநிலையினால் 7 பேர் பலி!

வைகாசி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube